Tuesday, January 14, 2014

திருமால் புகழ்!

தவத்திரு அருணகிரி நாதர் முருகர் மேல் அருளிய திருப்புகழின் நடையில் முருகனின் மாமன் திருமால் மேல் வரைந்தது

அத்திக்கிரி முத்துத் திருமுகன்
முத்தித்தரு வித்தைக் கிறையவன்
பத்தர்தம் நெஞ்சம் உரைந்திடும்
பர‌மன் அவன்

கற்றல்பல கற்றுத் தெளிந்தாரும்
முற்றுந் துறவுற்றுத் திரிந்தாரும்
அற்றும் ஈரெட்டும் அடைந்தாரும்
ஒரு சேர‌

பற்றும் பதமற்று வேறேது
முற்றத்துணை உளவோ என்றலின்
மற்று வேறேதிங் குரைத்திட‌
வேண்டுளவோ?

நெஞ்சந்தனில் மஞ்சங் கொண்டிடுந்
நந்தன்மகன் கண்ணன் எனுமவ
னெந்தன்மன மாண்டு அருள்செயுந்
நாள்தா னெதுவோ?

விண்ணுக்கொரு விண்ணாய் எழுந்தவன்
மண்ணைக்கொண்டு வாயில் திணித்துபின்
அண்டந்தனை ஆங்கே காட்டிய
அமுதன் னவன் ...

அஞ்சேலென கழல்கள் காட்டிட‌
தஞ்சம் எனபணிந்துத் தொழுதலின்
விஞ்சுஞ் சுகமேது முளவோ?
கூஉறுமினே!

காற்றின் ற‌ன் மகவாய் வந்த‌வன்
கூற்றை யுன் கூற்றா யாக்கிடின்
வேற்றுத்துய ராற்றிக் களைந்திடு
மாற்றல் உடைத்து

கூற்றுக்கொரு கூற்றாய் திகழ்பவன்
கூற்றின்பெருங் கூற்றுந் திகழ்கிலை
அவன்கூற்றாயின் காக்கிற் திகழ்ந்திட‌
மற்றொன்று இல‌

பற்றும் யாவும் பற்றாதிருந்திட‌
பற்றும் பதம் பற்றுகளறுந்திட‌
பற்றின் னப்பற்றே ஆக்குமாம்
பற்றற்றே

                                                                    -ரா. குழலவன்
மேலே எழுதியது படிக்கக் கடினமாய் இருந்தால், இப்படி பிரித்துப் படிக்கவும்:

அத்திக்கிரி முத்துத் திருமுகன்
முத்தித் தரு வித்தைக்கு இறையவன்
பத்தர் தம் நெஞ்சம் உரைந்திடும்
பர‌மன் அவன்

கற்றல் பல கற்று தெளிந்தாரும்
முற்றும் துறவுற்றுத திரிந்தாரும்
அற்றும் ஈரெட்டும் அடைந்தாரும்
ஒரு சேர‌

பற்றும் பதம் அற்று வேறேதும்
உற்றத்துணை உளவோ என்றலின்
மற்றும் வேறு ஏதும் இங்கு உரைத்திட
வேண்டுளவோ? [வேண்டி உள்ளதா?]

நெஞ்சந்தனில் மஞ்சம் கொண்டிடும்
நந்தன் மகன் கண்ணன் எனும் அவன்
எந்தன் மனம் ஆண்டு அருளிடும்
நாள் தான் எதுவோ?

விண்ணுக்கு ஒரு விண்ணாய் எழுந்தவன்
மண்ணைக் கொண்டு வாயில் திணித்து பின்
அண்டம் தனை ஆங்கே காட்டிய
அமுதன் அவன் ...

அஞ்சேல் என கழல்கள் காட்டிட‌
தஞ்சம் என பணிந்து தொழுதலின்
விஞ்சும் சுகம் ஏதும் உளவோ
கூறுமினே?

காற்றின் தன் மகவாய் வந்த‌வன் [அனுமன்]
கூற்றை உன் கூற்றாய் ஆக்கிடின் [அனுமன் சொல்லும் "ராம" நீயும் சொன்னால்]
வேற்றுத் துயர் ஆற்றிக் களைந்திடும்
ஆற்றல் உடைத்து

கூற்றுக்கு ஒரு கூற்றாய் திகழ்பவன் [எம தருமனை ஒரு காலால் அழித்த‌ கயா விஷ்ணு; கூற்று=எமன்]
கூற்றின் பெரும் கூற்றும் திகழ்கிலை [அவன் சொன்ன கீதையே தலை சிறந்தது; கூற்று=சொல்]
அவன் கூற்றாயின் காக்கிற் திகழ்ந்திட‌ [அவன் உன்னை அழிக்க நினைத்தால் உன்னை காக்க]
மற்றொன்று இல‌ [வேறு யாரும் இல்லை]

பற்றும் யாவும் பற்றாது இருந்திட‌
பற்றும் பதம்.... பற்றுகள் அறுந்திட‌
பற்றின், அப்பற்றே ஆக்குமாம்,
பற்று அற்றே!

No comments:

Post a Comment