இடறிய கல்லில் தேங்கி நின்றால் பயணம் முடிவதில்லை
கலங்கிய கண்கள் வரைந்த முகங்களில் முறுவல் பூப்பதில்லை
இருண்ட மேங்களை பிடித்தே நின்றால் வானில் விடியலில்லை
தோல்வியை தழுவியே அமர்ந்தல் மட்டும் நிறைந்த வாழ்க்கையில்லை
தடுக்க வந்த தோல்வி நம்மை தீண்டித் தீண்டி தோற்கட்டும்
வெற்றிக் காற்று என்றும் மனதின் வாயில் பக்கம் வீசட்டும்
நேற்றைய தோல்வி இன்றைய கல்வி என்னும் எண்ணம் தோன்றட்டும்
வெற்றியும் தோல்வியும் ஒன்றே என்னும் பக்குவம் மனங்கள் ஏற்கட்டும்
-குழலவன்(Murlidaran)