காற்றினில் ஓடும் மேகங்களே
உங்கள் கால்கள் கடனாய் தாருங்கள்
காரினில் ஊற்றியே கடன் பட்டேன்
உங்கள் காலால் பெட்ரோல் தவிற்கின்றேன்!
நேற்று கடந்த வழி எதுவோ?
நாளை போகும் வழி எதுவோ?
இன்று நிற்கும் நிலை எதுவோ?
நினைவோ ஒன்றும் நீ கொள்ளாய்!
உன்னை போலே ஆவேனோ
கனக்கும் கவலைகள் மறப்பேனோ?
அழுகை தாங்கி பிறந்த மகன்
சிரிப்பில் நிலையாய் திளைப்பேனோ?
போகும் போக்கில் மழை தந்தாய்
இடியாய் சிரித்து மகிழ்கின்றாய்
வாழ்க்கையின் இடையின் பிறர்க்குதவி
செய்தே இன்பம் காண்பேனோ?
- குழலவன்
உங்கள் கால்கள் கடனாய் தாருங்கள்
காரினில் ஊற்றியே கடன் பட்டேன்
உங்கள் காலால் பெட்ரோல் தவிற்கின்றேன்!
நேற்று கடந்த வழி எதுவோ?
நாளை போகும் வழி எதுவோ?
இன்று நிற்கும் நிலை எதுவோ?
நினைவோ ஒன்றும் நீ கொள்ளாய்!
உன்னை போலே ஆவேனோ
கனக்கும் கவலைகள் மறப்பேனோ?
அழுகை தாங்கி பிறந்த மகன்
சிரிப்பில் நிலையாய் திளைப்பேனோ?
போகும் போக்கில் மழை தந்தாய்
இடியாய் சிரித்து மகிழ்கின்றாய்
வாழ்க்கையின் இடையின் பிறர்க்குதவி
செய்தே இன்பம் காண்பேனோ?
- குழலவன்