Visit blogadda.com to discover Indian blogs

Thursday, January 30, 2014

The Lone Maple


Pleasing was the breeze
 And pleasant was the weather
Yet I stand to gaze
  The poor maple wither

Birds love in thy branch
  Squirrels play in thy shade
Yet I see to wonder
  Why ye maple wither?

Soft drizzle kissing you
  Cuckoo singing sweet love
Blissful is this winter
  Yet why ye maple wither?

"Blessed are the couples
    To play, sing, love and kiss
 But I wait in solitude!
     With no love felt, I wilt ! "

Tuesday, January 14, 2014

திருமால் புகழ்!

தவத்திரு அருணகிரி நாதர் முருகர் மேல் அருளிய திருப்புகழின் நடையில் முருகனின் மாமன் திருமால் மேல் வரைந்தது

அத்திக்கிரி முத்துத் திருமுகன்
முத்தித்தரு வித்தைக் கிறையவன்
பத்தர்தம் நெஞ்சம் உரைந்திடும்
பர‌மன் அவன்

கற்றல்பல கற்றுத் தெளிந்தாரும்
முற்றுந் துறவுற்றுத் திரிந்தாரும்
அற்றும் ஈரெட்டும் அடைந்தாரும்
ஒரு சேர‌

பற்றும் பதமற்று வேறேது
முற்றத்துணை உளவோ என்றலின்
மற்று வேறேதிங் குரைத்திட‌
வேண்டுளவோ?

நெஞ்சந்தனில் மஞ்சங் கொண்டிடுந்
நந்தன்மகன் கண்ணன் எனுமவ
னெந்தன்மன மாண்டு அருள்செயுந்
நாள்தா னெதுவோ?

விண்ணுக்கொரு விண்ணாய் எழுந்தவன்
மண்ணைக்கொண்டு வாயில் திணித்துபின்
அண்டந்தனை ஆங்கே காட்டிய
அமுதன் னவன் ...

அஞ்சேலென கழல்கள் காட்டிட‌
தஞ்சம் எனபணிந்துத் தொழுதலின்
விஞ்சுஞ் சுகமேது முளவோ?
கூஉறுமினே!

காற்றின் ற‌ன் மகவாய் வந்த‌வன்
கூற்றை யுன் கூற்றா யாக்கிடின்
வேற்றுத்துய ராற்றிக் களைந்திடு
மாற்றல் உடைத்து

கூற்றுக்கொரு கூற்றாய் திகழ்பவன்
கூற்றின்பெருங் கூற்றுந் திகழ்கிலை
அவன்கூற்றாயின் காக்கிற் திகழ்ந்திட‌
மற்றொன்று இல‌

பற்றும் யாவும் பற்றாதிருந்திட‌
பற்றும் பதம் பற்றுகளறுந்திட‌
பற்றின் னப்பற்றே ஆக்குமாம்
பற்றற்றே

                                                                    -ரா. குழலவன்
மேலே எழுதியது படிக்கக் கடினமாய் இருந்தால், இப்படி பிரித்துப் படிக்கவும்:

அத்திக்கிரி முத்துத் திருமுகன்
முத்தித் தரு வித்தைக்கு இறையவன்
பத்தர் தம் நெஞ்சம் உரைந்திடும்
பர‌மன் அவன்

கற்றல் பல கற்று தெளிந்தாரும்
முற்றும் துறவுற்றுத திரிந்தாரும்
அற்றும் ஈரெட்டும் அடைந்தாரும்
ஒரு சேர‌

பற்றும் பதம் அற்று வேறேதும்
உற்றத்துணை உளவோ என்றலின்
மற்றும் வேறு ஏதும் இங்கு உரைத்திட
வேண்டுளவோ? [வேண்டி உள்ளதா?]

நெஞ்சந்தனில் மஞ்சம் கொண்டிடும்
நந்தன் மகன் கண்ணன் எனும் அவன்
எந்தன் மனம் ஆண்டு அருளிடும்
நாள் தான் எதுவோ?

விண்ணுக்கு ஒரு விண்ணாய் எழுந்தவன்
மண்ணைக் கொண்டு வாயில் திணித்து பின்
அண்டம் தனை ஆங்கே காட்டிய
அமுதன் அவன் ...

அஞ்சேல் என கழல்கள் காட்டிட‌
தஞ்சம் என பணிந்து தொழுதலின்
விஞ்சும் சுகம் ஏதும் உளவோ
கூறுமினே?

காற்றின் தன் மகவாய் வந்த‌வன் [அனுமன்]
கூற்றை உன் கூற்றாய் ஆக்கிடின் [அனுமன் சொல்லும் "ராம" நீயும் சொன்னால்]
வேற்றுத் துயர் ஆற்றிக் களைந்திடும்
ஆற்றல் உடைத்து

கூற்றுக்கு ஒரு கூற்றாய் திகழ்பவன் [எம தருமனை ஒரு காலால் அழித்த‌ கயா விஷ்ணு; கூற்று=எமன்]
கூற்றின் பெரும் கூற்றும் திகழ்கிலை [அவன் சொன்ன கீதையே தலை சிறந்தது; கூற்று=சொல்]
அவன் கூற்றாயின் காக்கிற் திகழ்ந்திட‌ [அவன் உன்னை அழிக்க நினைத்தால் உன்னை காக்க]
மற்றொன்று இல‌ [வேறு யாரும் இல்லை]

பற்றும் யாவும் பற்றாது இருந்திட‌
பற்றும் பதம்.... பற்றுகள் அறுந்திட‌
பற்றின், அப்பற்றே ஆக்குமாம்,
பற்று அற்றே!

நிலமகள்

கல்லூரி காலங்களில் கல்லூரி இதழுக்காக உழவின் பெருமையைப் பாடி எழுதியது.


கதிரவன் தன் கண்திறந்து கீழ்வானம் சிவக்க‌
செம்மை நிற பூமியும்தான் தகதகவென ஜொலிக்க‌
ஏற்றமிகு வயல் அதனில் பயிரினங்கள் தழைக்க    -   சீர்
ஏருடனே புகுந்தனன் அவ்வுழவனும் அங்குழைக்க‌

செம்மண்ணில் சீராக சிறுவாய்க்கால் தவழ‌
பச்சை பட்டாடையுடன் நிலமகளும் திகழ‌
பசுமை போர்த்தா இடத்து நாணிச் செழுமை குழைய   -  இப்
புவனத்திற்கே புசிவிப்பவளாம் புவிமகள் நீ வாழ்க‌

கார்மேகங்கள் திரண்டு மழை பொழிந்த்து அன்ன‌
கருமேனிதனிலிருந்து வியர்வை மழைப் பொழிய‌
சிப்பிபோல பூமியவள் நலம் போற்றிக் காத்தாள்   -   அதை
சிறு பச்சை முத்தாம் பசுந்தளிராய் அளித்தாள்

உச்சியிலே சூரியனும் திமிருடனே ஏற‌
கஞ்சிதனை பாங்காக தலையினிலே ஏற்றி
வஞ்சியவள் வயலுடைய வரப்பேறி வந்தாள் ‍   -     அவள்
கொஞ்சும் நாயகனாம் உழவனையும் அடைந்தாள்

நாயகனின் தோளினிலே களைப்பாற‌ச் சாய்ந்து
நங்கையவள் அவனிடம் ஒரு கேள்வியினை விடுத்தாள்
"பார்மேலே பவனிவரும் பகலவனைப் பாரும்         -   இங்கே
படுத்திருக்கும் பூமி அதனிற் சிறந்தோ என கூறும்?"

"கரிக்கும் கடல் நீரை தான் கொண்டதன் பின்பே
கதிரவனோ உப்பாக காசதையும் தந்தான்
என் மிதிகளையும் ஏர் கீரலையும் கொண்டதன் பின்பும் - கண்ணே
நிலமகளோ வளமையையே தந்தாள்!" என்றான்.

                                                                                                -ரா .குழலவன்
Click here to follow this blog | இவ்வலைப் பதிவைத் தொடர இங்கே ஃகிளிக் செய்யவும்

You might also like my other blog. Click here to get there.| எனது இன்னொரு வலைப்பதிவைக் காண இங்கே ஃகிளிக் செய்யவும்

Sunday, May 12, 2013

அம்மா

"அம்மா" என்று
சொன்னால் அது மூன்று எழுத்து கவிதை
சொல்லாவிட்டாலும் ஒரு மௌன கவிதை!
                                                       -   குழலவன்

Friday, March 8, 2013

அறிமுக உயிரே!

உன்னை முதல் முறை கண்டதும் எந்த பரவசமும் வரவில்லை!
உயிரை நீ உருவிக் கொண்ட பின் உடல் எதையும் உணரவில்லை,...
உன்னைத் தவிர‌....!


உயிரே! என்னை நீ "யார்?" என கேட்டால்
நான் எப்படி அறிமுகப் படுத்திக் கொள்ள?
உன் உடல் என்றா...?

      -குழலவன்

இவ்வலைப் பதிவைத் தொடர இங்கே ஃகிளிக் செய்யவும் | Click here to follow this blog


எனது வேறு பதிவைத் தொடர இங்கே ஃகிளிக் செய்யவும்! | Click here to follow my other blog

Tuesday, December 25, 2012

நல் மேய்ப்பர்


தந்தையே இல்லாமல் வந்த ஒரு குழந்தை
குழந்தையாய் அனைவரையும் ஏற்ற ஒரு தந்தை
அன்பினால் ஜெபித்தோம், வளர்த்தோம் நற்சிந்தை
மேய்ப்பரே வழி நடத்தும், யாமே உம் மந்தை
                                                                                                        - ‍குழலவன்


அனைவருக்கும் இந்த குழலவனின் இனிய கிறிஸ்து திருநாள் வாழ்த்துக்கள்


இவ்வலைப் பதிவைத் தொடர இங்கே ஃகிளிக் செய்யவும் | Click here to follow this blog

எனது வேறு பதிவைத் தொடர இங்கே ஃகிளிக் செய்யவும்! | Click here to follow my other blog